உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோண்டிகாலனி வாசிகள் 14 பேருக்கு பிறப்பு சான்றிதழ்

கோண்டிகாலனி வாசிகள் 14 பேருக்கு பிறப்பு சான்றிதழ்

கோவை; சுந்தராபுரம், கோண்டிகாலனியை சேர்ந்த, 14 பேருக்கு பிறப்பு சான்றிதழ்கள் வழங்கிய கமிஷனர் அடிப்படை தேவைகளை கேட்டறிந்தார்.மாநகராட்சி, 97வது வார்டு சுந்தராபுரம், கோண்டிகாலனியில் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மலை கிராம மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அவினாசிலிங்கம் பல்கலை சார்பில் சமூக விழிப்புணர்வு முகாம் நடத்துதல், கள ஆய்வு செய்தல் வாயிலாக அம்மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முகாம் செயல்பாடுகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று பார்வையிட்டார்.அப்போது, இதுவரை பிறப்பு சான்றிதழ் பெறாமலும், தற்போது பிறப்பு சான்றிதழ் வேண்டியும் விண்ணப்பித்த, 14 பேருக்கு மாநகராட்சி கமிஷனர் சான்றிதழ்கள் வழங்கினார். மேலும், அப்பகுதி மக்களின் தேவைகளையும் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !