மேலும் செய்திகள்
முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு நாள் அனுசரிப்பு
01-Nov-2024
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் காங்., சார்பில், முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கோவை தெற்கு மாவட்ட காங்., சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின், 107வது பிறந்த நாள் விழா, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்தது. மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார். நகர காங்., தலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர் தமிழ்செல்வன், மகளிர் காங்., மாநில துணை தலைவர் கவிதா முன்னிலை வகித்தார். மாவட்ட, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.அதில், முன்னாள் பிரதமர் இந்திராவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.*வால்பாறையில், நகர காங்., கட்சி சார்பில் இந்திரா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காங்., தலைவர் அமீர் தலைமை வகித்தார். கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் கருப்பையா இந்திரா சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினார்.விழாவில், சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம், செயல்தலைவர்கள் ஈஸ்டர்ராஜா, சந்திரசேகரன், கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
01-Nov-2024