உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்

அன்னுார்; சிப்காட் அரசாணையை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்த பா.ஜ., முடிவு செய்துள்ளது. அன்னுார் வடக்கு ஒன்றியத்தில் பா.ஜ., நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நிர்வாகிகளின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் மூக்கனுாரில் நடந்தது. பா.ஜ., வடக்கு ஒன்றிய தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார்.கூட்டத்தில், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து பேசினார். அன்னுாரின் வடக்கு பகுதியில் சிப்காட் தொழில் பேட்டை அமைப்பதற்காக பல ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த வெளியிடப்பட்ட அரசு ஆணை ரத்து செய்யப்படாமல் உள்ளது. எனவே, அந்த அரசு ஆணையை முழுமையாக ரத்து செய்ய தமிழக அரசை வலியுறுத்தி வடக்கு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் ஒன்றிய பொதுச்செயலாளர்கள் ராஜேந்திரன், ஈஸ்வரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை