உள்ளூர் செய்திகள்

பா.ஜ., ஸ்தாபன தின விழா

அன்னுார்; அன்னுார் வடக்கு ஒன்றியத்தில், 15 இடங்களில் பா.ஜ., ஸ்தாபன தின விழா நடந்தது. பாரதிய ஜனதா துவக்கப்பட்ட தின விழாவை ஒரு வாரம் கொண்டாட தலைமை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி அன்னுார் வடக்கு ஒன்றியத்தில், குமாரபாளையம், செல்லனுார், கஞ்சப்பள்ளி, குப்பனுார், வடக்கலுார், அக்கரை செங்கப்பள்ளி, ஆம்போதி உள்பட 15 இடங்களில் கொடியேற்று விழாவும், நிர்வாகிகள் சந்திப்பும் நடந்தது.வடக்கு ஒன்றிய தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி சிவக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமூர்த்தி, ஒன்றிய பொதுச் செயலாளர்கள் ஈஸ்வரன், ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.வருகிற 12ம் தேதி வரை ஸ்தாபன தினத்தை கொண்டாட முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ