மேலும் செய்திகள்
பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்
07-Nov-2025
Worldcup Semi Finals-லா இந்தியா மகளிர் அணி
24-Oct-2025
மேட்டுப்பாளையம்: பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக, தமிழகத்தை மாற்றிய தி.மு.க., அரசு, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, மேட்டுப்பாளையத்தில் பா.ஜ., மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதி மகளிர் அணியின் சார்பில், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி பிரபாவதி தலைமை வகித்தார். பொது செயலாளர் ராஜேஸ்வரி வரவேற்றார். சேவை பிரிவு இணை அமைப்பாளர் சங்கீதா, மாநில செயற்குழு உறுப்பினர் அனிதா உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் பேசிய மகளிர், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக, தமிழகத்தை மாற்றிய தி.மு.க., அரசே, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மேட்டுப்பாளையம் பா.ஜ., நகரத் தலைவர் சரவணகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட பொது செயலாளர் விக்னேஷ் உள்பட மகளிர் அணியினர், பா.ஜ., நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
07-Nov-2025
24-Oct-2025