உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளியில் ரத்ததான முகாம்

பள்ளியில் ரத்ததான முகாம்

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே உள்ள தனியார் பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது. காரமடை அருகே எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உள்ள இன்ட்ராக்ட் கிளப், காரமடை ரோட்டரி சங்கம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து, ரத்ததான முகாமை நடத்தியது. பள்ளி மாணவ, மாணவியர்கள் மத்தியில், ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த முகாம் நடத்தப்பட்டது. பள்ளி தாளாளர் பழனிசாமி தலைமை வகித்தார். இன்ட்ராக்ட் கிளப் தலைவர் பயல் வரவேற்றார். காரமடை ரோட்டரி சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ரோட்டரி கிளப் ரத்ததான முகாம் மாவட்ட தலைவர் கமலா முகாமை துவக்கி வைத்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் டாக்டர் ராம் தீபிகா தலைமையில், மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர். முகாம் ஏற்பாடுகளை ரோட்டரி சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவ சதீஷ்குமார், பள்ளி முதல்வர் சசிகலா மற்றும் பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர். முகாமில் மாணவ, மாணவியர், பெற்றோர், ஆசிரியர்கள் ரத்த தானம் செய்தனர். கிளப் செயலாளர் சம்யுக்தா, பொருளாளர் லிட்டிசா நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !