உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பா.ஜ., சார்பில் ரத்த தான முகாம்

பா.ஜ., சார்பில் ரத்த தான முகாம்

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில், பா.ஜ., தெற்கு ஒன்றியம் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இணைந்து, ரத்த தான முகாம் நடத்தியது.இதில், பா.ஜ., கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் வசந்தராஜன், கோவை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர். முகாமானது, கிணத்துக் கடவு பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் ஜோதிமணி தலைமையில் நடந்தது.முகாமில், கிணத்துக் கடவு சுற்று வட்டார பகுதி யில் உள்ள பொதுமக்கள் மற்றும் பா.ஜ.,வினர் என பலர் ரத்த தானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை