உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

மேட்டுப்பாளையம்; காரமடை ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. காரமடை ரோட்டரி சங்கம், ஐ.எம்.ஏ., திருப்பூர், காரமடையில் உள்ள கிரைஸ் தி கிங் பொறியியல் கல்லூரி ஆகியவை சார்பில் ரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் குமணன் நடராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் பங்குத்தந்தை மனோஜ் முன்னிலை வகித்தார். இதில் கல்லூரி மாணவர்கள் பலர் ஆர்வமாக கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். அவர்களிடமிருந்து சுமார் 100 யூனிட்டுக்கு மேல் ரத்த தானம் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி