உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  புத்தக வெளியீட்டு விழா

 புத்தக வெளியீட்டு விழா

கோவை: பால்குளமும் பூவரச மரமும் நுால் வெளியீட்டு விழா, ஓசூர் சாலையிலுள்ள ஆருத்ரா அரங்கில் நடந்தது. நுாலை வெளியிட்டு விஜயா பதிப்பகம் வேலாயுதம் பேசுகையில், ''அன்று வள்ளல்கள் நில புலன்களையும், தங்க, வைர ஆபரணங்களையும் பரிசாக வழங்கினர். இன்று எழுத்தாளர்களும், படைப்பாளர்களும் புத்தகங்களையே பரிசாக வழங்க முடியும். ஏனென்றால் புத்தகம் ஒரு அறிவுக்களஞ்சியம்,'' என்றார். கவிஞர் சதீஷ்தாசு வரவேற்றார். நுால் விமர்சகர் அறிவன் தலைமை உரை நிகழ்த்தினார். எழுத்தாளர்கள் வள்ளியப்பன், வேணுகோபால், கவிதாயினி உமாமகேஸ்வரி, நுாலாசிரியர் ராமதாசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ