நாய் கடித்து சிறுவன் காயம்
மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் காரமடை அருகே பெள்ளாதி பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுவன். இவரது வீட்டின் அருகில் ஒரு வளர்ப்பு நாய் உள்ளது. இதனிடைய 12 வயது சிறுவன் தெருவில் நடந்து போன போது, அவனை அந்த வளர்ப்பு நாய் துரத்தி சென்று கடித்தது. இதில் சிறுவனுக்கு கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இதனிடையே சிறுவனை கடித்த நாயின் தொல்லை குறித்து உரிமையாளரிடம் புகார் அளித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் காரமடை போலீசில் புகார் அளித்தனர்.