மேலும் செய்திகள்
மனைவியின் காதலனை கொன்று மகனுடன் தலைமறைவான தந்தை
06-Feb-2025
போத்தனூர்; கோவை, வெள்ளலுார் செல்லும் வழியிலுள்ள மகாலிங்கபுரம், ஜீவானந்தம் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, சி.ஆர்.பி.எப்.-,ல் பணிபுரிகிறார். இவரது மனைவி சரஸ்வதி. நேற்று மகன் ரோகித்கிருஷ்ணன் (8) மற்றும் மூன்று வயது மகனுடன் யோகா பயிற்சிக்கு சென்றுவிட்டு, ஸ்கூட்டரில், வெள்ளலுார் போத்தனூர் சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்பகுதியிலுள்ள வங்கி எதிரே வரும்போது பின்னால் வந்த லாரி, ஸ்கூட்டரில் உரசியதில், நிலைதடுமாறி ஸ்கூட்டர் சாலையில் விழுந்தது.இதில் ரோகித்கிருஷ்ணன் வலதுபுறமாக விழுந்தபோது லாரியின் பின்சக்கரம் சிறுவனின் தலையில் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானான். சரஸ்வதி, மற்றும் மூன்று வயது மகன் சிறு காயத்துடன் உயிர் தப்பினர்.போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஆலம்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் மகேந்திரனிடம் விசாரிக்கின்றனர்.தாயின் கண் முன் சிறுவன் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
06-Feb-2025