தூய்மை பணியாளருக்கு காலை உணவு திட்டம்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணிபுரியும், 250 துாய்மை பணியாளர்களுக்கு, நகராட்சி சார்பில் காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது; நீலகிரி எம்.பி., ராஜா, திட்டத்தை துவக்கி வைத்து, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.பின், அவர் கூறியதாவது:- கடந்த ஓராண்டில் மட்டும் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு என தனியாக புதிய குடிநீர் திட்டம், பஸ் நிலையம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த 'லாக் அப்' மரணங்களின்போது எடுத்த நடவடிக்கையையும், இன்று தி.மு.க., அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு பார்த்தாலே, எது நல்லாட்சி என புரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.