உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போத்தனுாரில் நோன்பு திறப்பு

போத்தனுாரில் நோன்பு திறப்பு

போத்தனூர் : கோவை, போத்தனூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.இதனையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. தொடர்ந்து அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. மதம் கடந்த மனித நேயம் எனும் கருத்தை வலியுறுத்தி, நடந்த இந்நிகழ்ச்சியில் அனைத்து மதங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாநகராட்சி கவுன்சிலர் காதர், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் இப்ராஹிம், கோவை மாவட்ட காங்., சிறுபான்மை பிரிவின் உமர், த.வெ.க., தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ், மவுலவி சதக்கத்துல்லா உமரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ