உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விஷம் குடித்த அண்ணனை காப்பாற்ற முயன்ற தம்பி கொலை

விஷம் குடித்த அண்ணனை காப்பாற்ற முயன்ற தம்பி கொலை

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, விஷம் குடித்த அண்ணன், காப்பாற்ற முயன்ற தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்தது குறித்து ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர். பொள்ளாச்சி அருகே, காளியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சோமநாதபுரத்தை சேர்ந்தவர் செந்தில்,45. இவரது அண்ணன் ரகுபதிராம்,52. இருவரும் தேங்காய் பறிக்கும் கூலித்தொழிலாளர்கள். ரகுபதிராமின் மனைவி வெண்ணிலா,48, சமையல் வேலைக்கு செல்வதில் அவருக்கு உடன்பாடில்லை. வேலைக்கு செல்ல வேண்டாம் என வெண்ணிலாவிடம் கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வெண்ணிலா வேலைக்கு சென்ற நேரத்தில் நேற்றுமுன்தினம் ரகுபதிராம், அவரது மனைவிக்கு விஷம் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த உறவினர்கள், ரகுபதிராமின் தம்பி செந்தில் ஆகியோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, ரகுபதிராமுக்கும், செந்திலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரகுபதிராம், தேங்காய் வெட்டும் அரிவாளால், செந்திலின் கழுத்தில் வெட்டினார்.படுகாயமடைந்த செந்திலை, அருகில் இருந்தோர் மீட்டு வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். விஷம் அருந்திய ரகுபதிராம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ