உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரம் விழுந்து கட்டடம் சேதம்

மரம் விழுந்து கட்டடம் சேதம்

அன்னுார்; அவிநாசியில் இருந்து கருவலூர், அன்னுார், பொகலூர் வழியாக மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தூரத்திற்கு 255 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக 1400 மரங்கள் வெட்டி அகற்றப்பட உள்ளன.நேற்று காலை, அன்னுார் அவிநாசி சாலையில், நாகமாதூரில் 50 அடி உயரமுள்ள, 50 ஆண்டுகளான புளிய மரத்தை ஒப்பந்த தொழிலாளர்கள் வேரோடு தோண்டி அகற்ற முயன்றனர். அந்த மரம் அதை ஒட்டி உள்ள கட்டடத்தின் மீது விழுந்தது. இதில் கட்டடத்தின் முதல் தளம் மற்றும் குடிநீர் குழாய், சன்சேடு ஆகியவை சேதமடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ