உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் கண்காட்சிக்கு விவசாயிகள் செல்ல பஸ் ஏற்பாடு

வேளாண் கண்காட்சிக்கு விவசாயிகள் செல்ல பஸ் ஏற்பாடு

சூலுார்; பெருந்துறை அருகே நாளை துவங்கும், மாநில அளவிலான வேளாண் கண்காட்சிக்கு, விவசாயிகளை அழைத்து செல்ல தோட்டக்கலைத் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சரளையில், மாநில அளவிலான வேளாண் கண்காட்சி இரண்டு நாள் நடக்கிறது. கண்காட்சியை நாளை (11ம் தேதி) முதல்வர் துவக்கி வைக்கிறார்.கண்காட்சிக்கு விவசாயிகளை பஸ்களில் அழைத்து செல்ல,சூலுார், சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்ர். விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்துக்கு வர அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.கண்காட்சியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், ஏற்றுமதி சார்ந்த பொருட்கள், பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானிய பொருட்கள், காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும், வேளாண் இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் விதைகள், செடிகள், இடுபொருட்கள் கண்காட்சியில் இடம் பெற உள்ளதாகவும், அதனால் விவசாயிகள் கண்காட்சியில் பங்கேற்று பயன் அடைய அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி