உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழைய வழித்தடத்தில் மீண்டும் பஸ்; பா.ஜ., கோரிக்கை

பழைய வழித்தடத்தில் மீண்டும் பஸ்; பா.ஜ., கோரிக்கை

பெ.நா.பாளையம் ; பெரியநாயக்கன்பாளையம் நகர் மண்டல் தலைவர் லோகேஷ் ராம், மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ள மனுவில், கூறியிருப்பதாவது:நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பாளையம் கிராமத்துக்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தினால், 7ம் நம்பர் பஸ் மேட்டுப்பாளையத்தில் இருந்து புதுப்பாளையம் வரை தினசரி நான்கு முறை காலை முதல் இரவு வரை இயங்கி வந்தது. இதனால் புதுப்பாளையம், ராக்கிபாளையம், இடிகரை, மணிகாரம்பாளையம், செங்காளிபாளையம் ஊர் மக்கள் பயனடைந்தனர்.கடந்த, 2021ம் ஆண்டு உலகம் எங்கும் ஏற்பட்ட கொரோனா தொற்றால், ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால், பஸ் போக்குவரத்து அரசால் நிறுத்தப்பட்டது.மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் பெரும்பாலான போக்குவரத்துகளும் இயல்பு நிலைக்கு திரும்பி பயன்பாட்டில் உள்ளன. ஆனால், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பாளையம் கிராமத்துக்கு தினசரி நான்கு முறை வந்து சென்ற ஏழாம் நம்பர் பஸ் மீண்டும் வரவில்லை.இதனால் பயணிகள் பெரும் அவதிப்படுகிறார்கள். எனவே, மீண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து புதுப்பாளையத்துக்கு, ஏழாம் நம்பர் பஸ்ஸை இயக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை