உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லாரி மீது பஸ் மோதல்; பயணியர் 4 பேர் காயம்

லாரி மீது பஸ் மோதல்; பயணியர் 4 பேர் காயம்

நெகமம்; பொள்ளாச்சி -- பல்லடம் ரோடு, சிறுகளந்தை அருகே ரோட்டோரம் நின்று இருந்த லாரி மீது தனியார் பஸ் மோதியதில், பயணியர் நான்கு பேர் காயமடைந்தனர்.பொள்ளாச்சி --- பல்லடம் ரோடு, சிறுகளந்தை அருகே, பொள்ளாச்சி நோக்கி கே.பி.டி., என்ற தனியார் பஸ்சை, டிரைவர் கந்தசாமி, 38, ஓட்டினார். பொள்ளாச்சி --- காங்கேயம் பஸ்சில், 40க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர்.டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், ரோட்டோரம் பிரேக் டவுன் ஆகி நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில், பஸ்சில் பயணித்த செஞ்சேரிமலையை சேர்ந்த ஜான்சிமேரி, 26, அவரது குழந்தை சாந்தினி, 5, கொடுவாயைச் சேர்ந்த கமலம், 70 மற்றும் சின்ன கம்மாளப்பட்டியை சேர்ந்த சாந்தாமணி, 52, ஆகிய நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். விபத்து குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ