ரோட்டில் புதர் ஆதிக்கம் வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
நெகமம்: செட்டியக்காபாளையம் -- கோதவாடி செல்லும் ரோட்டின் இரு பகுதியிலும், புதர் நிறைந்து இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். செட்டியக்காபாளையத்தில் இருந்து கோதவாடி செல்லும் ரோட்டின் இருபுறமும் அதிகளவில் புதர் வளர்ந்து உள்ளது. இதனால், இந்த ரோட்டில் பயணிக்கும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், முள்செடிகள் படர்ந்து அதன் கிளைகள் வெளியே நீட்டிய படி இருக்கிறது. இதனால் இரவு நேரத்தில் பைக்கில் செல்பவர்களுக்கு முள் செடிகள் இருப்பது தெரியாததால், கை மற்றும் முகங்களில் காயம் ஏற்படுகிறது. நிலை தடுமாறி விபத்துக்கும் உள்ளாகின்றனர். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த பருவமழையால் ரோட்டோரத்தில் இருக்கும் செடிகள் அதிக அளவு வளர்ந்துள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, ரோட்டோரத்தில் இருக்கும் புதர்கள் மற்றும் முள் செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.