வில்லங்கம் இல்லாமல் சொத்துக்கள் வாங்க விற்க லேன்ட்ஸ் அன்ட் டீட்ஸ்க்கு வாங்க
இ ன்றைய காலத்தில் பலரும் சொத்துக்கள் வாங்கும் போதும், விற்கும் போதும் அதற்குண்டான சட்ட சிக்கல் பிரச்னைகளை சரியாக பார்க்காமல் கிரயம் செய்து, அதன் பிறகு வரும் பிரச்சனைகளை சட்டரீதியாக எதிர் கொண்டு மிகவும் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள். ஒரு சொத்து வாங்கும்போதும் விற்கும் போதும் அதற்குண்டான சட்ட வல்லுனர்களை அணுகி மேற்கொண்டு கிரயத்திற்கு செல்ல வேண்டும். இதற்கெல்லாம் தீர்வாக கோவை, ரேஸ்கோர்ஸ், வெஸ்ட் கிளப் ரோட்டில் அமைந்துள்ளது லேன்ட்ஸ் அன்ட் டீட்ஸ் நிறுவனம், அசையா சொத்துக்களில் (இடம், கட்டடம்) உள்ள சட்ட சிக்கல்கள், பிரச்சனைகள் இவையனைத்தும் இல்லாத வண்ணம் சொத்துக்களை நல்ல முறையில் சரிபார்த்து தருகிறார்கள். இந்த நிறுவனம் தமிழகத்தில் உள்ள சொத்துக்கள் வாங்குவது, விற்பது, நிர்வகிப்பது போன்ற செயல்களைக் கையாளுவதில் மிகச் சிறந்த முறையில் செய்து வருகிறார்கள். இங்கு இதற்குண்டான சட்ட வல்லுனர்கள், ஓய்வு பெற்ற வருவாய்த்துறை, நில அளவை அலுவலர்கள், ஓய்வு பெற்ற பதிவுத்துறை அலுவலர்கள் என அனைத்து வல்லுனர்களும் சரிபார்த்த பின்பே பத்திரம் தயார் செய்து தருகிறார்கள். சொத்துகளுக்கான ஆவணம், மூலப்பத்திரங்கள், சிட்டா பட்டா, நில அளவை படங்கள், வில்லங்க சான்றிதழ்கள் உட்பட்ட அனைத்து வித வேலைகளும் ஒரே கூரையின் கீழ் செய்து தருகிறார்கள். மேலும் அரசு சாலை, வீட்டு வசதி, அரசு அலுவலகங்களுக்காக கையகப்படுத்துதல், நகரமைப்பு திட்ட சாலை பொது உபயோக வகைப்பாடுகள், நிலுவை வழக்குகள் போன்ற பல இன்றியாமையாதவற்றை சரிபார்த்த பின்னர் மட்டுமே வாங்கவேண்டும். இல்லாத பட்சம் எந்த நேரத்திலும் பிரச்சனைகள் வரக்கூடும் அல்லது பிரச்சனைகள் உருவாக்க முடியும். எனவே சட்ட ரீதியான பத்திரம் தயார் செய்ய வேண்டும். இவை அனைத்தையும் செய்ய கூடிய அனைத்து அலுவலர்களும் இங்கு உள்ளனர். இதற்கான அனைத்து ஆலோசனைகளும் வழங்கி வருகிறார்கள். இந்நிறுவனம் கோவை ரேஸ்கோர்ஸ், சென்னை லாயிட்ஸ் ரோடு, பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய இடங்களில் மக்களின் நம்பிக்கை மிகுந்த நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின ஸ்தாபகர் மற்றும் நிர்வாக இயக்குனர் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளரும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினரும் சட்ட வல்லுனருமான ரத்தினசபாபதி ஆவார். மேலும் சொத்துக்கள் வாங்க, விற்க, சட்ட ரீதியான ஆலோசனைகள் பெற, 91501 14351, 99449 92530, 70105 92827, 0422 - 4359777 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.