உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி - மண்டலம் கிரிக்கெட் போட்டி; வி.எல்.பி. அணி வென்றது டிராபி

சி - மண்டலம் கிரிக்கெட் போட்டி; வி.எல்.பி. அணி வென்றது டிராபி

கோவை; பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே, சி-மண்டலம் அளவிலான கிரிக்கெட் போட்டி, எஸ்.என்.எம்.வி., கலை அறிவியல் கல்லுாரியில், 11 நாட்கள் நடந்தன. மாணவர்களுக்கான இப்போட்டியில், 17 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், எஸ்.என்.எம்.வி., கல்லுாரி அணியும், வி.எல்.பி., கல்லுாரி அணியும் மோதின. வி.எல்.பி., அணியினர், 20 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 194 ரன் எடுத்தனர். எஸ்.என்.எம்.வி., அணியினர், 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 158 ரன் எடுத்தனர். இரண்டாம் அரையிறுதியில், எஸ்.டி.சி., அணியும், என்.ஜி.எம்., கல்லுாரி அணியும் மோதின. என்.ஜி.எம்., அணியினர், 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 128 ரன் எடுத்தனர். எஸ்.டி.சி., அணியினர், 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 106 ரன் எடுத்தனர். இறுதிப்போட்டியில், என்.ஜி.எம்., கல்லுாரி அணியும், வி.எல்.பி., கல்லுாரி அணியும் மோதின. வி.எல்.பி., அணியினர், 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 148 ரன் எடுத்தனர். 149 ரன் இலக்குடன் களம் இறங்கிய என்.ஜி.எம்., அணியினர், 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 100 ரன் எடுத்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !