உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழிற்சாலை உரிமத்தைப் புதுப்பிக்க அழைப்பு

தொழிற்சாலை உரிமத்தைப் புதுப்பிக்க அழைப்பு

கோவை: தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ், 2025ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தைப் புதுப்பிக்க, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.கோவை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் (1) சீனிவாசகம் வெளியிட்டுள்ள அறிக்கை:தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2025ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் வாயிலாக மட்டுமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். புதுப்பித்துக் கொள்ள வரும் 31ம் தேதி கடைசி நாள். எனவே, கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள, தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சாலைகள், http://dish.tn.gov.inஎன்ற இணையதள முகவரிக்குள் சென்று, உரிய உரிமைத் தொகைய ஆன்லைன் வாயிலாக செலுத்தி, விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை