உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  விதைப்பரிசோதனை செய்ய அழைப்பு

 விதைப்பரிசோதனை செய்ய அழைப்பு

தடாகம்: விதைப்பரிசோதனை செய்து சிறுதானியங்கள் சாகுபடி செய்ய, வேண்டுமென கோவை விதை பரிசோதனை அலுவலர் நர்கீஸ் அறிவுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: நீரிழிவு மற்றும் உடல் பருமன் கட்டுப்பாட்டுக்கு சிறந்த உணவாக சிறுதானியங்களை டாக்டர்கள் பரிந்துரைப்பதால் அவற்றின் தேவை அதிகரித்துள்ளது. சிறுதானிய சாகுபடி லாபம் தரக்கூடியது. சிறுதானியங்களை விதைக்கும் முன் அதன் தரத்தை பரிசோதிப்பது அவசியம். தடாகம் ரோட்டில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில், விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை