மானியத்தில் பருத்தி விதை பயனடைய அழைப்பு
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வேளாண்துறை சார்பில், மானிய விலையில் பருத்தி விதை வழங்கப்படுகிறது.கிணத்துக்கடவு வட்டாரத்தில், ஆண்டுதோறும் 50 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது வேளாண் துறை சார்பில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் வாயிலாக மானிய விலையில் விவசாயிகளுக்கு பருத்தி விதை வழங்கப்படுகிறது.வேளாண் அலுவலகத்தில், 120 கிலோ விதை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு விவசாயிக்கு 4 முதல் 8 கிலோ வரை, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.ஒரு ஏக்கருக்கு, 600 முதல் 800 கிலோ வரை மகசூல் கிடைக்கும். எனவே, விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பருத்தி விதைகள் பெற்று பயனடைய வேண்டுமென, கிணத்துக்கடவு வேளாண்துறை உதவி இயக்குனர் தேவி மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.