சிறுதானிய பயிர் ஊக்குவிக்க பிரசாரம்
கோவை : வேளாண் துறையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், அனைத்து வட்டாரங்களிலும் சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், பிரசார விழிப்புணர்வு வாகனத்தை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், கொடியசைத்து துவக்கி வைத்தார். வேளாண் இணை இயக்குனர் வெங்கடாசலம், வேளாண் துணை இயக்குனர் மல்லிகா, வேளாண் துணை இயக்குனர் புனிதா, வேளாண் உதவி இயக்குனர்கள் பலர் பங்கேற்றனர்.