உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காஸ் வினியோகஸ்தரை தாக்கியவர் மீது வழக்கு

காஸ் வினியோகஸ்தரை தாக்கியவர் மீது வழக்கு

போத்தனூர்; கோவைபுதூர் பிரிவு, வாட்டர் போர்டு சாலையை சேர்ந்தவர் பெருமாள், 64. பாரத் காஸ் வினியோகஸ்தர். கடந்த 7ல் இவர் தனது கடையிலிருந்தார். அங்கு வந்த வேணுகோபால் என்பவர், தனது காஸ் சிலிண்டர்களை ஒப்படைத்தார். டிபாசிட் தொகை, 10 ஆயிரத்தை உடனே திரும்ப தருமாறு கேட்டுள்ளார். பெருமாள் ஐந்து நிமிடங்கள் காத்திருக்குமாறு கூறியுள்ளார். ஏற்க மறுத்த வேணுகோபால், பெருமாளின் அலுவலக அறையினுள் நுழைந்து, தகாத வார்த்தைகளால் திட்டி, அங்கிருந்த லேப்டாப்பை எடுத்து, பெருமாளை தாக்கினார். கல்லால் பெருமாளின் கார் பின்புற கண்னாடியை உடைத்தார். பெருமாள் புகாரில், குனியமுத்தூர் போலீசார் வேணுகோபாலை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ