உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தற்செயல் விடுப்பு போராட்டம்; பணிகள் பாதிப்பு வெறிச்சோடிய அலுவலகங்கள்

தற்செயல் விடுப்பு போராட்டம்; பணிகள் பாதிப்பு வெறிச்சோடிய அலுவலகங்கள்

-- நிருபர் குழு -வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு காரணமாக, பொள்ளாச்சி வருவாய்துறை அலுவலகங்கள் காலியாக காணப்பட்டன.வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத்துறை உள்ளிட்ட அனைத்து நிலை உயிர் மற்றும் உடைமைகளை காக்க, சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நேற்று நடந்தது.இதனால், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், ஆனைமலை தாலுகா அலுவலகம் உள்ளிட்ட வருவாய்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் மொத்தம் உள்ள, 93 பேரில், 86 பேர் விடுப்பில் சென்றனர். பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், எட்டு பேர் தற்செயல் விடுப்பு எடுத்தனர். இதனால், பணிகள் பாதிக்கப்பட்டன.* வால்பாறை தாலுகா அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில், 13 ஊழியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தால் பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.* உடுமலை தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த போராட்டத்தால், பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால், வருவாய்த்துறை சார்ந்த பெரும்பாலான பணிகள் முடங்கியது.உடுமலை தாலுகா அலுவலகத்தில், மொத்த பணியாளர்கள் 27 பேர்; இதில், 22 பேர் தற்செயல் விடுப்பு எடுத்தனர். நில அளவை துறை 5 பேரும், 55 வி.ஏ.ஓ.,க்கள் 50 பேரும் தற்செயல் விடுப்பு எடுத்தனர்.மொத்தமுள்ள 49 கிராம உதவியாளர்களில், 31 பேர் விடுப்பு எடுத்திருந்தனர். வட்ட வழங்கல் துறையில், 5 பேர் என மொத்தம், 113 பேர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.* மடத்துக்குளம் தாலுகாவில் அலுவலர்கள் 11 பேர்; வி.ஏ.ஓ.,க்கள் 19 பேர், கிராம உதவியாளர்கள் 11 பேர் என, மொத்தம், 41 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதால், பணிகள் பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ