நேரு கல்விக் குழுமத்தின் சார்பில் கேட்டலிஸ்ட் மாநாடு
கோவை: நேரு கல்விக் குழுமத்தின், தொழில்நுட்ப வணிக வளர்ச்சி மையம் (என்.ஜி.ஐ. டி.பி.ஐ.) மற்றும் ஸ்டார்ட்அப் டி.என்.,ஆகியவை இணைந்து, தமிழகத்தின் புதிய கல்வி சூழலில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், 'கேட்டலிஸ்ட் மாநாட்டை 1.0' நடத்தின. மாநாட்டுக்கு நேரு கல்விக் குழும செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.ஈரோடு எம்.பி., பிரகாஷ், ஸ்டார்ட்அப் டி.என்., தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜா ராமநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மாநாட்டில், ஸ்டார்ட்அப் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள புதுமை, ஒத்துழைப்பு மற்றும் எதிர்காலத்திற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஸ்டார்ட்அப் டி.என்., இணை துணைத் தலைவர் பிரேம்குமார், என்.ஜி.ஐ. டி.பி.ஐ. நிர்வாக இயக்குனர் வைகுண்டசெல்வன், ஏ.ஐ.சி., ஐ.ஐ.டி., கோட்டயம் தலைவர் மிட்டு டிகி, உளவியலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வாத்வானி அறக்கட்டளை நிர்வாகி விஷால் நாயர் ஆகியோர், அறிவுப் பரிமாற்ற அமர்வுகளை வழிநடத்தினர்.