உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.டி.சி.ஏ. கிரிக்கெட் கோவை நைட்ஸ் வெற்றி

சி.டி.சி.ஏ. கிரிக்கெட் கோவை நைட்ஸ் வெற்றி

கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.) சார்பில் ஒன்றாவது டிவிஷன் போட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா மைதானம் உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது. கோவை நைட்ஸ் அணியினர் 50 ஓவரில் 337 ரன் எடுத்தனர். ராதாகிருஷ்ணன் 142, ஜிதேந்தர் குமார் 85, கிஷோர் 30 ரன் எடுத்தனர். இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணியினர் 43.4 ஓவரில் 240 ரன் எடுத்து தோல்வி அடைந்தனர். ஹரிசங்கர் 56, ராகுல் 47, முகமது ஆசிக் 36, விஸ்வஜித் 35, ராம் பிரசாத் 34 ரன் எடுத்தனர். எதிரணியின் சூர்யா 3 விக்கெட் எடுத்தார். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !