உங்கள் பண்டிகையை பாங்க் ஆப் மகாராஷ்டிராவுடன் கொண்டாடுங்கள்
பா ங்க் ஆப் மகாராஷ்டிரா நாடு முழுவதும் சுமார் 2,600க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது. இது ஓர் இந்திய அரசு நிறுவனமாகும். கோவை மண்டலத்தில் இப்போது 48 கிளைகளுடன் நல் ஆதரவோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிதியாண்டில் மேலும், 22 புதிய கிளைகள் துவங்கப்படவுள்ளது. பிரத்யேகமாக வீட்டுக்கடன் வழங்கும் சிறப்பு கிளை கோவையிலும், பெருநிறுவனத்திற்கு கடன் வழங்குவதற்கு பிரத்யேகமாக இரண்டு கிளைகள் கோவை, திருப்பூரிலும்செயல்பட்டு வருகிறது.அந்நியச் செலவாணிக்கு திருப்பூர், துாத்துக்குடியில் இரண்டு கிளைகளும் செயல்பட்டு வருகிறது. முதன்முறையாக தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து 'குளோபல் எஜ்' எனும் புதிய சேமிப்புக் கணக்கு சிறப்பு அம்சங்களுடன் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கென பிரத்யேகமாக டெக்ஸ்டைல் கிளஸ்டர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாங்க் ஆப் மகாராஷ்டிரா கிளைகளில் அனைத்து வகையான தொழில் கடன் வசதி, தங்க நகைக்கடன், வீட்டுக்கடன் வசதி, வாகனக்கடன் வசதி, க்யூ ஆர் கோடு மூலம் கடன் வசதி என அனைத்து வசதிகளும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் அமையப்பெற்றுள்ளன.வங்கி வாடிக்கையாளர்களுக்கான அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் அனைத்தும் பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் அனைத்து கிளைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 1935ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி, இந்த ஆண்டில் தங்களது 91ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதனை கொண்டாடும் விதமாக வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு திட்டங்களும், சிறப்பு சலுகைகளும் வங்கியின் அனைத்து கிளைகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன.