உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்டேட்களில் கொண்டாட்டம்; யானைகளுக்கு திண்டாட்டம்

எஸ்டேட்களில் கொண்டாட்டம்; யானைகளுக்கு திண்டாட்டம்

வால்பாறை:வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. யானைகள் பகல் நேரத்தில் தேயிலை காட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் முகாமிட்டு தொழிலாளர்களின் வீடுகள், பள்ளி சத்துணவு கூடம், ரேஷன் கடைகளை இடித்து சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், வால்பாறையில் தீபாவளியை முன்னிட்டு, கடந்த இரண்டு நாட்களாக எஸ்டேட் பகுதியில் பட்டாசு வெடித்து மக்கள் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடி சப்தத்தால் யானைகள் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு வரவில்லை. வனப்பகுதியிலும், அருகில் உள்ள தேயிலை காட்டிலும் முகாமிட்டுள்ளன. வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை, வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்,அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடித்து கொண்டாட வேண்டும். வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். யானைகள் நடமாடும் பகுதியில் அதிக சப்தம் உள்ள வெடிகளை வெடிக்க கூடாது. குறிப்பாக வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ