உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இ.கம்யூ., கட்சியின் நுாற்றாண்டு விழா

இ.கம்யூ., கட்சியின் நுாற்றாண்டு விழா

வால்பாறை ; வால்பாறையில், இ.கம்யூ.,கட்சியின் நுாற்றாண்டுவிழாவையொட்டி பல்வேறு இடங்களில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டது.இ.கம்யூ.,கட்சி துவங்கி நுாறு ஆண்டுகள் நிறைவடைந்தன. இதே போல் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நுாறாவது ஆண்டு பிறந்த நாள் விழா வால்பாறையில் கொண்டாடப்பட்டது.இ.கம்யூ.,கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில், கட்சியின் தாலுகா செயலாளர் மோகன் கொடியேற்றி, இனிப்பு வழங்கினார். வாட்டர்பால்ஸ், சின்கோனா, கவர்க்கல், முடீஸ் உள்ளிட்ட, 20 இடங்களில் கட்சிக்கொடியேற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.விழாவில், இ.கம்யூ., கட்சியின் தாலுகா பொருளாளர் வக்கீல் விஸ்வநாதன், தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் ஜீவானந்தம், ஜீவலட்சுமி, மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !