| ADDED : மார் 02, 2024 11:11 PM
கோவை;புறநகர் பகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, 180 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கோவை வந்தனர்.கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிக்காக போலீசாருடன், துணை ராணுவப்படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.முதற்கட்டமாக, கேரள மாநிலம் கொச்சியிலிருந்து 275க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் நேற்று முன்தினம் வந்தனர். நேற்று கல்பாக்கம் அனல் மின்நிலையத்தில் இருந்து, 180 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வந்தனர். அவர்களுக்கு மாவட்ட போலீசார்வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர்கள் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.