உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் டிப்ளமோ சேர்க்கை; நாளை சான்றிதழ் சரிபார்ப்பு

வேளாண் டிப்ளமோ சேர்க்கை; நாளை சான்றிதழ் சரிபார்ப்பு

கோவை; தமிழ்நாடு வேளாண் பல்கலை பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. பல்கலை மாணவர் சேர்க்கை டீன் வெங்கடேச பழனிசாமி அறிக்கை: வேளாண் பல்கலையில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகள் பயிற்றுவிக்கப் படுகின்றன. நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.மொத்தம் 1,240 இடங்கள் நிரப்பப் பட உள்ளன. ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்பட்டு, உரிய விதிமுறைகளைப் பின்பற்றி, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இவ்வாறு, இடம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. அண்ணா அரங்கத்தில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில், கலந்தாய்வு கட்டணம் ரூ. 200, ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். தங்களுக்கான தேதியில், அசல் சான்றிதழ்களை, டீனிடம் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், சேர்க்கைக் கட்டணம் ரூ.5,000, வரும் 11ம் தேதிக்குள் இணைய வழியில் செலுத்த வேண்டும். சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினாலோ, சேர்க்கைக் கட்டணம் செலுத்தாவிட்டாலோ, சேர்க்கை ரத்தாகி விடும்; மறுவாய்ப்பு வழங்கப்படாது.மேலும் விவரங்களுக்கு, 94886 35077, 94864 25076 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி