நீதிமன்ற ஊழியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
கோவை; நீதிமன்ற ஊழியர் பணியிடங்களுக்கு, கோவையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில், காலியாகவுள்ள நகல் பிரிவு உதவியாளர், அலுவலக உதவியாளர், காவலர், தோட்டப்பணியாளர் உள்ளிட்ட 2,300 க்கும் மேற்பட்ட ஊழியர் பணியிடங்களை நிரப்ப, கடந்தாண்டு, ஏப்ரலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களில் செய்முறை தேர்வுக்கு, முந்தய முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று துவங்கியது.கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்த, 1500 பேருக்கு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகிறது.வரும், 19ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு, சென்னை ஐகோர்ட்டில் செய்முறை தேர்வு நடைபெறும்.