உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமும் 50 அடி வீதம் 50 நாட்கள் சக்ராசனம்

தினமும் 50 அடி வீதம் 50 நாட்கள் சக்ராசனம்

தினமும், 50 அடி சக்ராசனம் முறையில் தொடர்ந்து, 50 நாட்கள் நடந்து, இந்திய சாதனை புத்தகத்தில் கோவை மாணவி இடம் பிடித்துள்ளார்.கோவை பூமார்க்கெட்டை சேர்ந்தவர் ஸ்ரீபால் ஜெயின். சுயதொழில் செய்து வருகிறார். மனைவி பானுஜெயின். இத்தம்பதியின் மகள் தியூதி. தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு யோகா மீது நாட்டம் ஏற்பட்டது. இதையடுத்து ஆறு மாதங்களுக்கு முன், யோகா பயிற்சியை துவக்கினார்.ரத்தினபுரியை சேர்ந்த கணேஷ் என்பவரிடம் பயிற்சி பெறத் துவங்கினார் தியூதி. பயிற்சி மட்டும் போதாது; எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தியூத்திக்கு ஏற்பட்டது.இதையடுத்து, சக்ராசனம் என்ற ஆசனத்தில், உலக சாதனை படைக்க எண்ணினார். இதையடுத்து கடந்த மார்ச் 1ம் தேதி சக்ராசன முறையில், தினமும் 50 அடி நடக்கத் துவங்கினார். தொடர்ந்து, 50 நாட்கள் இதை மேற்கொண்டார். இவரது இச்சாதனை, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை