உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆசிரியர் கலந்தாய்வு நடக்குமிடம் மாற்றம்

ஆசிரியர் கலந்தாய்வு நடக்குமிடம் மாற்றம்

கோவை: கோவையில், நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் நேரடி நியமனம், பணி நிரவல் மற்றும் பொதுமாறுதலுக்கான, கலந்தாய்வு நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது.இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு, ஒன்றியம் மற்றும் கல்வி மாவட்ட அடிப்படையில், இன்று (ஜூலை 3) இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.வருவாய் மாவட்டத்திற்குள் இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நாளையும், ஒன்றியத்திற்குள் வரும் 5ம் தேதியும் நடைபெறுகிறது. தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 19ம் தேதி தொடங்கி ஜூலை 23ம் தேதிக்குள்ளும், பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு ஜூலை 24ம் தேதி தொடங்கி, ஜூலை 30ம் தேதியுடனும் முடிவடைகிறது.இந்நிலையில், முன்னர் புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்பொழுது அந்த இடம் மாற்றப்பட்டு, உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள, நல்லாயன் துவக்கப்பள்ளியில் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை