உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விநாயகா வித்யாலயா பள்ளியில் சதுரங்க போட்டி

விநாயகா வித்யாலயா பள்ளியில் சதுரங்க போட்டி

மேட்டுப்பாளையம் ; காரமடை அருகே உள்ள விநாயகர் வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில், என்.கே. ரங்கசாமி நினைவு சதுரங்க போட்டி, மண்டல அளவில் உள்ள பள்ளிகளுக்கு இடையே நடந்தது. இதில் ஏராளமான பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக அலுவலர் நிர்மலா தேவி போட்டிகளை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் சர்லின் வரவேற்றார். ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு, 4முதல் 5ம் வகுப்பு , 6 முதல் 8ம் வகுப்பு, 9 முதல் 12ம் வகுப்பு என வகுப்புகள் வாரியாக, நான்கு பிரிவாக போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தாளாளர் சோமசுந்தரம், பரிசுத்தொகையும், என்.கே. ரங்கசாமி நினைவு கேடயமும் வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ராம்குமார், கிருத்திகா, சாலமன், அஜித் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை