மேலும் செய்திகள்
இன்று இனிதாக: திருப்பூர்
08-Jun-2025
கோவை; கோவை மாநகராட்சி, 19வது வார்டு மணியக்காரன்பாளையத்தில், ரூ.1.57 கோடியில், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு உள்ளது. காலை, 9:00 முதல் பிற்பகல், 4:00 மணி வரை புறநோயாளிகள் பிரிவு செயல்படும். ஒலம்பஸ், கணபதி மாநகர், பாலு கார்டன், பாப்பநாயக்கன்பாளையம், அண்ணா நகர், கோவில்மேடு உள்ளிட்ட, 20 இடங்களில், தலா, 25 லட்சம் ரூபாய் செலவில் நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை, காலை, 8:00 முதல் மதியம், 12:00 வரை; மாலை, 4:00 முதல் இரவு, 8:00 வரை செயல்படும். இம்மையங்களை, முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.கோவையில் நடந்த நிகழ்ச்சியில், மேயர் ரங்கநாயகி, துணை கமிஷனர் குமரேசன், மருத்துவ சுகாதார அலுவலர் பாலுசாமி, நகர் நல அலுவலர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
08-Jun-2025