உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்டார் விற்பனை ஜோர்

கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்டார் விற்பனை ஜோர்

வால்பாறை:கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கடைகளில் 'ஸ்டார்' விற்பனை சூடுபிடித்துள்ளது.இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில், கிறிஸ்துவ மக்கள் டிச., 25ல் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுகின்றனர்.பண்டிகை நெருங்குவதையொட்டி கிறிஸ்துவ மக்கள் தங்கள் வீடுகளில், அழகிய கிறிஸ்துமஸ் ஸ்டார் பொருத்தி, ஒளிர விடுகின்றனர்.இது தவிர, வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கின்றனர்.வால்பாறை நகரில் உள்ள கடைகளில், கேக், ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரம், குடில்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில், வால்பாறை நகரில் உள்ள கடைகளில் ஸ்டார் விற்பனை சூடுபிடித்துள்ளது.வியாபாரிகள் கூறுகையில், 'கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வால்பாறை நகரில் உள்ள கடைகளில் ஸ்டார் விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது. 150 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை ஸ்டார்கள் விற்பனை செய்யப்படுகின்றன,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ