உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை விமானத்தில் குடிமகன்கள் கலாட்டா

கோவை விமானத்தில் குடிமகன்கள் கலாட்டா

கோவை; கோவை விமானத்தில் பயணித்த பெண் பயணியை, உடன் பயணம் செய்த 3 ஆண்கள் போதையில் துன்புறுத்தினார்களா என, போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த 12ம் தேதி, கோவை - சென்னை சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த பெண் பயணி, குடிபோதையில் இருந்த மூன்று ஆண் பயணிகள் கலாட்டா செய்வதாக, ஊழியர்களிடம் புகார் கூறினார். சென்னையில் விமானம் தரை இறங்கிய பிறகும் தன்னை துன்புறுத்தியதாக சென்னை விமான நிலைய போலீசாரிடமும் புகார் அளித்தார். இண்டிகோ விமான நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'இந்தப்பிரச்னை குறித்து விசாரித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பயணியின் புகாருக்கு தீர்வு காண்போம். பயணிகளுக்கு இடையூறு விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை