உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிமகன்கள் தொல்லை சிங்கப்பெண்கள் அதிரடி

குடிமகன்கள் தொல்லை சிங்கப்பெண்கள் அதிரடி

சின்னதடாகம்: சின்னதடாகம் பஸ் ஸ்டாண்டில் குடிமகன்களால் தொந்தரவு செய்யப்பட்டு வந்த, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, சிங்கப்பெண் அதிரடி போலீசார் மீட்டு, சமூக நல குழுவினரிடம் ஒப்படைத்தனர். இங்குள்ள பஸ் ஸ்டாண்டில், 47 வயது மதிக்கத்தக்க, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அங்கேயே தங்கி வாழ்ந்து வந்தார். தினமும் கிடைக்கும் உணவை உண்டு, பஸ் ஸ்டாண்டில் உறங்கி விடுவார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு குடிமகன்களில் சிலர் இடையூறு செய்வதாக, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிங்கப்பெண் அதிரடி படைக்கு தகவல் தெரிவித்தனர். சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர் அமிர்த பிரியா தலைமையில், தலைமை காவலர் அனிதா மற்றும் காவலர்கள் பவித்ரா, கனகராஜ் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உணவு அளித்தனர். பின்னர் பெண்களுக்கு உதவும் சமூக நல குழுவினரிடம் அவரை ஒப்படைத்தனர். சிங்கப்பெண் அதிரடி படையினர் கூறுகையில், 'பெண்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் உடனடியாக, 1091 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பெண்களே தங்களை காப்பாற்றிக் கொள்ளும் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை