உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டி கிரைம் செய்திகள்: இரு பெண்கள் மீது வழக்கு

சிட்டி கிரைம் செய்திகள்: இரு பெண்கள் மீது வழக்கு

இரு பெண்கள் மீது வழக்கு புலியகுளத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சுமதி, 42. மாநகராட்சி தூய்மை பணியாளர். இவரது மகன், வெள்ளலூரில் வசித்து வருகிறார். இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதை அவரது பெற்றோர் கண்டித்து, தொடர்பை கைவிடும் படி கூறினார். அப்போது அங்கு வந்த அப்பெண் மற்றும் அவரது சகோதரி, தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து கேட்ட சுமதியை, இரு பெண்களும் தாக்கினர். படுகாயம் அடைந்த சுமதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில், இரு பெண்கள் மீது வழக்கு பதிந்த ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். போன் பறித்த மூவருக்கு சிறை சவுரிபாளையம் வேளாங்கன்னி நகரை சேர்ந்தவர் அகில்ராஜா, 22. கடந்த, 21ம் தேதி சவுரிபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மூவர் அகில்ராஜாவின் சட்டை பையில் இருந்த மொபைல்போனை பறித்து தப்பினர். புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், 19, சதாசிவம், 23, உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பாலாஜி, 27 ஆகியோர் மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி