சிட்டி கிரைம் செய்திகள்
புகையிலைப் பொருட்கள் விற்பனை
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்து, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவை போத்தனுார், சுந்தராபுரம், சிங்காநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் புகையிலை விற்பனை குறித்த சோதனை நடத்தினர். அதில், கோவை கோணவாய்க்கால்பாளையத்தை சேர்ந்த பிரின்ஸ்குமார், 36, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தலையாரி வீதியை சேர்ந்த ஆனந்த், 26, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சதீஸ்குமார், 35 ஆகிய மூவரை கைது செய்தனர். சட்ட விரோத மது விற்பனை
கோவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், கோவை காந்திபுரம் பகுதியில் மதுவிற்பனை குறித்து சோதனை நடத்தினர். அதில் அப்பகுதியில், மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் கரம்பவிடுதியை சேர்ந்த பாலசுப்ரமணியம், 37 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 17 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.