உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சிக்கு நகர பொறியாளர் ஏழு மாதங்களுக்கு பின் நியமனம்

மாநகராட்சிக்கு நகர பொறியாளர் ஏழு மாதங்களுக்கு பின் நியமனம்

கோவை; ஏழு மாதங்களுக்கு பின், கோவை மாநகராட்சி நகர பொறியாளராக விஜயகுமார் நியமிக்கப்பட்டு, அவர் பொறுப்பேற்றார்.இதற்கு முன் நகர பொறியாளராக இருந்த அன்பழகன், 'பயோமைனிங் பேஸ்-2' டெண்டர் இறுதி செய்வதில் ஏற்பட்ட குழப்பத்தால், கடந்தாண்டு செப்., மாதம் சென்னை மாநகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.ஏழு மாதங்களாக, புதிய அதிகாரி நியமிக்கப்படவில்லை. நிர்வாக பொறியாளர் முருகேசன், நகர பொறியாளர் பதவியை கூடுதலாக கவனித்து வந்தார். அவர், கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு செய்யப்பட்டு, ஈரோடு மாநகராட்சிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.ஈரோடு மாநகராட்சியில் கண்காணிப்பு பொறியாளராக இருந்த விஜயகுமாருக்கு, நகர பொறியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, கோவை மாநகராட்சிக்கு நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றார். நிர்வாக பொறியாளர் முருகேசன் கவனித்து வந்த பணியிடத்துக்கு வேறு அதிகாரி இன்னும் நியமிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ