உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நுாறு சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டம் கோவை; விரைவில் அறிவிக்கப்படுகிறது

நுாறு சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டம் கோவை; விரைவில் அறிவிக்கப்படுகிறது

கோவை : கோவை மாவட்டம், 100 சதவீத எழுத்தறிவித்தல் பெற்ற, மாவட்டமாக விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.மத்திய அரசின் 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 15 வயதிற்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாத நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.தமிழ்நாடு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம், இந்திய அரசு பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையுடன் இணைந்து, 2024-2025 கல்வியாண்டில்,கோவை மாவட்டத்தில் திட்டத்தின் முதல் கட்டமாக 20,199 நபர்களுக்கு எழுத்தறிவு பயிற்சி வழங்கி, அவர்களுக்கான தேர்வுகளும் முடிக்கப்பட்டன.தற்போது, திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், பேரூர், பொள்ளாச்சி (வடக்கு மற்றும் தெற்கு), சர்க்கார்சாமக்குளம், சுல்தான்பேட்டை, சூலூர், தொண்டாமுத்தூர் மற்றும் வால்பாறை ஆகிய வட்டார மையங்களில் எழுத்தறிவு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 1,782 ஆண்கள் மற்றும் 5,464 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 7,246 பேர் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படும்.இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'இந்த திட்டத்தின் கீழ் அதிகமான நபர்களுக்கு எழுத்தறிவு பயிற்சி வழங்கப்பட்டது.பொதுவாக, இலக்கு நிர்ணயிக்கப்படும். ஆனால், இந்த முறை, எழுதப் படிக்கத் தெரியாத அனைவரையும் கணக்கிட்டு, அவர்களுக்கு கல்வி வழங்க அறிவுறுத்தப்பட்டது. கோவை ஒரு பெரிய மாவட்டம் என்பதால் இங்கு பயில்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.ஏற்கனவே, நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டங்களாக அறிவிக்கப்படவுள்ளன. தற்போது கோவையில் பயில்பவர்கள் தேர்வை வெற்றிகரமாக முடித்தவுடன், வரும் நவம்பர் மாதத்திற்கு மேல், கோவையும் 100 சதவீத எழுத்தறிவை அடைந்த மாவட்டமாக அறிவிக்கப்படும்' என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Venkatanarayanan S
ஏப் 18, 2025 21:32

என்ன பிரயோஜனம் சங்கீ க கட்சி இங்க ஓரளவுக்கு தான் ஒட்டு வாங்குது. அப்படின்னா படிச்சு என்ன பிரயோஜனம்


R.P.Anand
ஏப் 18, 2025 12:18

அப்படி என்றால் சின்னத்திற்கு பதிலாக பெயர் போட்டு தேர்தல் நடத்த முடியுமா...


Iyer
ஏப் 18, 2025 11:55

படித்தவர்கள் பெருகி என்ன லாபம்? கற்றவர்களாக ஒருவரும் ஆகவில்லையே தெருவுக்கு தெரு ஆஸ்பத்ரிகளும், PHARMACY களும் பெருகி நாட்டு மக்கள் பிணி பிடித்தவர்கள் ஆகிவிட்டனர் கல்வியின் முக்கிய நோக்கு - நாட்டு மக்கள் நல்ல உடல் நலத்துடனும், போதைக்கு அடிமையாகாமல், சண்டை சச்சரவுகள் இல்லாமல் மகிழ்ச்சியாக மூலைக்கு மூலை சாராயக்கடை, மளிகைக்கடை DRUGS வியாபாரம்,


Sampath Kumar
ஏப் 18, 2025 10:21

பிஜேபி காரனுக்கு வோட் போட்டால் 100 சதவிகிதம் வந்துரும் போல


Keshavan.J
ஏப் 18, 2025 11:51

இந்த தலைப்புக்கும் 100% லிட்டெரசிக்கும் என்ன சம்பந்தம்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 18, 2025 16:26

திமுகவிற்கு ஓட்டு போட்டால் 100 சதவீதம் குடிகாரர்கள் டாஸ்மாக் மாநிலமாக அறிவிக்க பட வாய்ப்பு உண்டு.


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 18, 2025 10:13

கொங்கு மண்டலத்துல செந்தில் பாலாஜியையும் ஜெயிக்க வச்ச கொடுமைக்குத்தான் இப்போ ரொம்ப பேருக்கு எழுத்தறிவிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டியதாப்போச்சு


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 18, 2025 09:36

படிப்பறிவு, எழுத்தறிவு இருக்குமிடங்களில் எல்லாம் திராவிட மாடல் செல்லாக்காசாக இருக்கிறது ....


Subramanian Marappan
ஏப் 18, 2025 08:27

அப்போ யாரும் ஓட்டளிக்கும் நாளில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கைநாட்டு வைக்க மாட்டார்களா? 5 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் எல்லாம் படித்து கொண்டு இருப்பார்களா?


Natarajan Mahalingam
ஏப் 18, 2025 07:50

அருமை. வாழ்த்துக்கள்.


Kasimani Baskaran
ஏப் 18, 2025 07:31

சிறப்பு. அதே சமயம் திராவிட பொய்களை அடையாளம் காணவும் பயிற்சி பட்டறைகள் நடத்தலாம். பொய்களின் மாநிலமே மூழ்கிப்போகும் ஆபத்தும் இருக்கிறது.


Oviya Vijay
ஏப் 18, 2025 07:09

இம்புட்டு படிச்சு என்ன யூஸ் இருக்கு. எலெக்ஷன்னு வந்தா எல்லா பயலுகளையா பார்த்து கொங்கு மண்டலத்துல ஜெயிக்க வெச்சிருக்கீங்க... அடுத்த எலெக்ஷன்லயாவது இது மாறும்னு நம்புறேன்...


Svs Yaadum oore
ஏப் 18, 2025 08:06

படித்தவன் அப்படித்தானே வோட்டு போடுவான் ....படிக்காத திராவிட தற்குறி ராமசாமி பெயரை சொல்லி டாஸ்மாக் கொத்தடிமை ....


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 18, 2025 08:29

அப்பா ஆட்சியில் ஓசி ஆபாச பேச்சுத் துறை அமைச்சரை தேர்ந்தெடுத்த மக்கள் படிப்பறிவில்லாத முண்டங்களா இல்லை சோற்றால் அடித்த பிண்டங்களா


vivek
ஏப் 18, 2025 08:34

இதோ ஒரு 200 டாஸ்மாக் அறிவாளி சொல்றத கேளுங்க


Barakat Ali
ஏப் 18, 2025 09:45

இம்புட்டு படிச்சு என்ன யூஸ் இருக்கு. எழுத்தறிவு வேறு ..... அதிகம் படிப்பது வேறு .... விபரம் தெரியாத கொத்தடிமைகள் எழுதித் தள்ளுகிறார்கள் ....


சமீபத்திய செய்தி