மேலும் செய்திகள்
TNPL-லா Mass Performance by Ash அண்ணா
06-Jun-2025
கோவை: கோவை மாவட்ட ஜூனியர் பெண்கள் கால்பந்து அணிக்கு, 20 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான, 17 வயதுக்கு உட்பட்ட வீராங்கனைகளுக்கான ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இன்று முதல் வரும், 22ம் தேதி வரை நடக்கிறது. இதற்கென, கோவை மாவட்ட அணி வீராங்கனைகள் தேர்வு, பிஷப் அம்புரோஸ் கல்லுாரி கால்பந்து மைதானத்தில் கடந்த, 11ம் தேதி நடந்தது. இதில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 63 வீராங்கனைகள் பங்கேற்றனர். வீரர்களின் உடற்தகுதி, தனித்திறன் அடிப்படையில், 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த பயிற்சி முகாம் நிறைவில், 20 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இன்று திண்டுக்கல் மற்றும் திருப்பூர் அணிகளிடையே போட்டி நடக்கிறது. இதில், வெற்றிபெறும் அணியை கோவை அணி எதிர்கொள்ள உள்ளதாக, கோவை மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் அனில்குமார் தெரிவித்தார்.
06-Jun-2025