கோவை அரசு மருத்துவக்கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கோவை; கோவை அரசு மருத்துவ கல்லுாரியின், குளோபல் முன்னாள் மாணவர்களின் அமைப்பின், ஆண்டு பொதுக்குழு கூட்டம், 'கனெக் ஷன்' என்ற பெயரில் கோவை கிளப்பில் நடந்தது. தலைவர் ரகு தலைமை வகித்தார். அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்களின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இந்த அமைப்பின் வாயிலாக, 11 அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்களின் முழுமையான கல்வி செலவுகள் வழங்கப்பட்டுள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர். நிகழ்வில், துணைத்தலைவர் அகிலா அய்யாவூ, முன்னாள் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். அமைப் பு செயலாளர் சத்யன், பொருளாளர் மது சாய்ராம், துணைத்தலைவர் அகிலா அய்யாவூ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.