உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை நீதிபதிகள்  இடமாற்றம்

கோவை நீதிபதிகள்  இடமாற்றம்

கோவை : கோவையில் பணிபுரிந்த நீதிபதிகள், வெவ்வேறு நகரங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கோவையில் உள்ள பெண்கள் வன்கொடுமை வழக்கு நீதிமன்ற நீதிபதி அப்துல்ரஹ்மான், கோவை ஜே.எம்., 2 கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக, சென்னை மொபைல் கோர்ட் நீதிபதி காமராசு நியமிக்கப்பட்டார். கோவை ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட் கோபாலகிருஷ்ணன், மேட்டூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.கோவை மாவட்ட முன்சிப் கோர்ட் நீதிபதி பிரகாஷ், ஊட்டி முன்சிப் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக, உசிலம்பட்டி மாஜிஸ்திரேட் மகாராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை முதலாவது கூடுதல் முன்சிப் கோர்ட் நீதிபதி ரேணுகாதேவி, பண்ருட்டி முன்சிப் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக, பழநி மாஜிஸ்திரேட் கலைவாணன் நியமிக்கப்பட்டுள்ளார்.கோவை 2வது கூடுதல் முன்சிப் கோர்ட் நீதிபதி தேவராஜ், கிருஷ்ணகிரி ஜே.எம்., 1 கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு, இவருக்கு பதிலாக நாமக்கல் மாஜிஸ்திரேட் நந்தினி நியமிக்கப்பட்டுள்ளார். கோவை, ஜே.எம்., 3 மாஜிஸ்திரேட் கிருத்திகா, திருப்பூர் விரைவு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.கோவை முதலாவது விரைவு கோர்ட் நீதிபதி அலெக்ஸ்ராஜ், தேனி முன்சிப் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக, சத்தியமங்கலம் முன்சிப் கோர்ட் நீதிபதி ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார். கோவை ஜே.எம்., 2 மாஜிஸ்திரேட் சுனில்வினோத், திருவள்ளூர் ஜே.எம்., 1 கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். கோவை 2வது விரைவு கோர்ட் நீதிபதி சத்யா, சங்கரி ஜே.எம்., 1 கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக, திருக்குவளை நீதிபதி ராஜ் கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை ஜே.எம்., 5 மாஜிஸ்திரேட் சுஜித், ராமேஸ்வரம் முன்சிப் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு, இவருக்கு பதிலாக, ராமநாதபுரம் கூடுதல் மகளிர் கோர்ட் நீதிபதி ரேவதி நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை