மேலும் செய்திகள்
சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம்
09-Jun-2025
கோவை; போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் கோவை மாநகர எஸ்.ஐ., தனபாலனுக்கு முதல்வர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.துடியலுார் அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் தனபாலன். 33; போத்தனுார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார்.தனபாலன், கோவை மாநகர போதை பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு சிறப்பு பிரிவில் உள்ளார். இதில், இதுவரை 55 போதை பொருள் வழக்குகளில், 169 குற்றவாளிகளை கைது செய்ய உதவியுள்ளார். 161 கிலோ கஞ்சா, 77 கிராம் மெத்தபெட்டமைன், 29 இருசக்கர வாகனம், ஐந்து நான்கு சக்கர வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளார். மாநகர பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த தனபாலன் பெரிய பங்காற்றியுள்ளார்.போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட தனபாலனுக்கு முதலமைச்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதை அவர் இந்த ஆண்டு சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பெற உள்ளார். தமிழ்நாட்டில், 15 போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விருது பெறவுள்ள எஸ்.ஐ., தனபாலனை அதிகாரிகள் பாராட்டி வாழ்த்தினர்
09-Jun-2025